கிட்னி ஸ்டோன் வீட்டில் தீர்வு
சிறுநீரகக்கல் (KIDNEY STONE)
சிறுநீரகக்கல் வலியை உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும் , அதனுடைய வலி எப்படி இருக்கும் என்று, தினந்தோறும் வேலையில் மூழ்கி இருப்பவர்கள், வேலையின் இடையில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப் போடுபவர்களுக்கு, சிறுநீரகங்களில் சிறிய கல் போன்ற உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
கல் சிறியது அதன் தரும் வலி மிக மிக பெரியது.

கிட்னி ஸ்டோன் ஏற்படும் காரணங்கள் (what causes kidney stones)
அரிசோனா பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் தண்ணீர் குறைவாக எடுத்துக் கொள்ளும் மக்களிடமிருந்து சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பு 32 % என்று தெரியவந்துள்ளது.
அதிக உப்பு நிறைந்த உணவுகள், எடுத்துக்காட்டாக ஊறுகாய், அப்பளம் மற்றும் Junk food எடுப்பது இறைச்சி அடிக்கடி சாப்பிடுவது.
டீ ,காபி அடிக்கடி குடிப்பது போன்ற பழக்கங்கள் சிறுநீரகக்கல் வேகமாக உருவாகும் காரணமாகும்.
அதிக தண்ணீர் எடுத்துக் கொள்ளாத நபர்களில் சிறுநீரில் கால்சியம் ஆக்சிலேட் மற்றும் யூரிக் ஆக்சிலேட் உடன் சேர்ந்து சிறுநீரகக்கல் உருவாகும்
.
மரபு ரீதியான காரணங்களாலும் சிறுநீரக கல் உருவாகும்.
சிறுநீரகக்கல் இருப்பதற்கான அறிகுறிகள்
கை கால்களில் வீக்கம், ரத்தம் கலந்து சிறுநீர் வெளியேறுதல், இடுப்பு பகுதியில் இடைவிடாது ஏற்படும் தொடர்ந்த வலி, வாந்தி, தலை சுற்றுவது போன்ற உணர்வு அதேபோல அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுவது.
சரி அறிகுறிகள் தெரிந்து விட்டது ,இதை இயற்கை வழிகளில் எப்படி குணமாக்குவது , எந்தெந்த முறைகளில் வராமல் தடுப்பது என்று பார்க்கலாம்.
கிட்னி ஸ்டோன் தடுக்கும் உணவுகள் தமிழில்
கிட்னி ஸ்டோன் இயற்கையாக வெளியேற வழி
Top Secrets 6
எலுமிச்சை +வெதுவெதுப்பான நீர்
காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் அரை எலுமிச்சம்பழம் பிழிந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்களை கரைக்கும், அதேபோல புதிதாக வராமல் தடுக்கும்.
தேங்காய் நீர்
இளநீர், தேங்காய் நீர் தினமும் குடித்து வரும்போது, அது சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.
இரண்டாம் உலகப் போரின் போது காயப்பட்ட வீரர்களுக்கு செலுத்தப்படும் குளுக்கோஸ் பாட்டிலில் குறைவாக இருந்தது அப்போது இளநீர் நேரடியாக (சாலைன்) குளுக்கோஸ் பாட்டிலுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டது.
அந்த அளவிற்கு அதிக மருத்துவ குணம் உடையது.
துளசி இலை
துளசி இலை நம்முடைய தமிழ்நாட்டில் கோவில் தீர்த்தங்களுடன் சேர்ந்து வழங்கப்படும் அளவிற்கு கொண்டாடப்படும் மூலிகை. தினமும் ஐந்து முதல் ஆறு துளசிகள் தேனுடன் கலந்து சாப்பிட்டு வர யூரிக் ஆசிட்
கற்களை கரைக்கும் தன்மை கொண்டது, கற்கள் வராமலும் தடுக்கும்.
தர்பூசணி
தர்பூசணியில் உள்ள நீர் தன்மை கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.
நீர் அருந்தும் பழக்கம் – கிட்னி ஸ்டோனுக்கான முதன்மை மருந்து
தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரகத்தில் கல் வரும் வாய்ப்பு குறைவு.
கல் வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்
தினமும் காலையில் சிறிது, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு குடித்துவிட்டு 20 நிமிடம் வரை நடைபெற்று செய்தல், தாகம் எடுக்கும்
தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
ஜங்க் உணவுகள், பொறித்து செய்யப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஜங்க் உணவுகளில் சேர்க்கப்படும் உப்பின் சதவீதங்கள் மிக அதிகம்.
சாக்லேட், டீ, காபி போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது.
ஊறுகாய் ,அப்பளம் போன்றவற்றில் உப்பு அதிகம்.
பீட்ரூட் ஆக்சிலேட் அதிகம் என்பதால் சிறுநீரக கல் உள்ளவர்கள் எடுக்காமல் இருப்பது நல்லது.
சல்மான்கான் சிறுநீரகக்கல் பாதிக்கப்பட்ட அறுவை சிகிச்சை வரை சென்றார். குணமடைந்த பின்பு அவர் கூறியது நீர் தான் இந்த உலகத்தின் மிகச் சிறந்த மருந்து என்று.
தண்ணீர் குடிக்காத எல்லோருக்கும் வரக்கூடிய பிரச்சனை சிறுநீரகக்கல்.
சுய பரிசோதனை- கிட்னி ஸ்டோன் வீட்டில் தீர்வு
ஏற்கனவே சிறுநீரக்கல்லால் பாதிக்கப்பட்டவர் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மற்றவர்களை பொறுத்தவரையில் வலி அலை போல பரவுதல், சிறுநீரில் நிறம் மாறி ரத்தம் போல வருவது, உடலில் ஏற்படும் வலி எப்படி உடலை மாற்றி மாற்றி முயற்சி செய்தாலும் தொடர்வழி போன்றவை அறிகுறிகள்.
சிறுநீரகக்கல்
வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகவும், தண்ணீர் குடிப்பதே ஒரு வேலையைப் போல மக்கள் உணர்வதாலும் சிறுநீரகக்கல் உருவாகி சிரமங்களை சந்திக்கின்றனர்.
சிறுநீரகக்கல், கண்ணுக்குத் தெரியாது எதிரி திடீரென்று அவர் கொடுக்கும் தாக்குதல், உங்களால் தாங்க முடியாத அளவிற்கு இருக்கும், அவரை தடுக்க நமக்கு இருக்கும் ஒரே நண்பன் தண்ணீர்.
Source : கிட்னி ஸ்டோன் வீட்டில் தீர்வு




