Heart Attack காரணங்கள்
Heart Attack காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுக்க உதவும் எளிய வழிகள்
உலக அளவில் மாரடைப்பின் நிலைமை
உலக அளவில் மனிதர்களின் இறப்புக்கான முக்கியமான காரணங்கள் ஒன்று மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்.
இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் ரத்தம் முற்றிலுமாக நிறுத்தப்படும் போது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுகிறது
மாரடைப்பு கொரோனாவிற்கு பின்பு மிகவும் அதிகரித்துள்ளது. இருந்தாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு நம்முடைய வாழ்க்கை முறை தேர்வுகள், மோசமான உணவு முறைகள், புகையிலை மற்றும் மதுவின் அதிகப்படியான பயன்பாடு போன்றவையும் காரணங்களாக உள்ளன.

WHO அறிக்கை — உலகளவில் 1/3 மரணம் இதயநோய்களால்
WHO அறிக்கையின் படி உலகில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணம் இதய நோய்களாலேயே ஏற்படுகிறது. இதயத்திறகு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் திடீரென்று ஏற்படும் அடைப்பு இதயத்திற்கான ஆக்சிஜன் கிடைக்காமல் செய்துவிடுகிறது இதனால் மிகவும் ஆபத்தான இதய அடைப்பு ஏற்படும்.
Heart Attack — திடீர் சம்பவமா? இல்லை நம் பழக்கங்களின் விளைவா?
Heart Attack திடீரென்று நடக்கின்ற ஒரு சம்பவம் போல இருந்தாலும் அது நம்முடைய வாழ்வில் நாம் நம்முடைய உணவு முறைகளாலும் பழக்கவழக்கங்களாலும் ஏற்படுத்திய சின்னச்சின்ன பாதிப்புகளின் மொத்த உருவம்
திங்கள் காலை ஆபத்து – Harvard ஆய்வு
Harvard School of Public Health நடத்திய ஒரு ஆய்வில் உலக அளவில் Heart Attack ஆனது திங்கள்கிழமை தான் அதிகம் ஏற்படுகிறது. அதுவும் திங்கள்கிழமை காலை 6 மணியிலிருந்து காலை பத்து மணிக்குள் 20 சதவீதம் அதிகமான Heart Attack ஏற்படுகிறது.
Weekend Relax → Sudden Stress Shift (Heart Attack காரணங்கள்)
இதற்கான காரணம் ஆழமானது மற்றும் வித்தியாசமானது. உலகம் முழுவதும் Week-End பொதுவாக விடுமுறையாகவே இருக்கிறது. எனவே எல்லோரும் குடும்பம், ஓய்வு, தூக்கம் என மிகவும் Relax ஆக இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை முடிந்து திங்கட்கிழமை என்று வரும்போது திடீரென்று Deadline ,Travel , Office , Meeting , Pressure என அனைத்தையும் ஒரே நேரத்தில் நினைக்கும் போது நம்முடைய மூளையில் Tension அதிகரிக்கும்.
இது நம்முடைய Stress ஹார்மோனை இரண்டு மூன்று மடங்கு அதிகரிக்க செய்கிறது இதனால் ரத்த அழுத்தம்(BP) அதிகமாகும் ரத்த அழுத்தம் அதிகமானால் இதயத்துடிப்பும் அதிகமாகும். ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு இருந்தால் அது ரத்தத்தை தடை செய்து ஹார்ட் அட்டாக்கை நேரடியாக உருவாக்குகிறது.
இதைத் தடுக்க எப்போதும் ஞாயிற்றுக்கிழமை போல் Relax – ஆக இருப்பது நல்லது.
Heart Attack ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்
ஆரோக்கியமற்ற உணவு முறை
நம் உடலின் அடிப்படை உணவு தான். Packet foods, Bakery items, Maida based snacks, Deep-fried items, sugary drinks, instant foods , Fast Food போன்ற உணவுகள் வாய்க்கு ருசியாக இருந்தாலும் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் சொல்லும் தமனிகளுக்கு நல்லதல்ல.
தமனிகள் தான் நம் உடல் முழுவதும் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்தில் இருந்து கொண்டு செல்கிறது . Trans fats மற்றும் refined carb உடம்புக்குள் சொல்லும் போது நம்முடைய தமனிகளின் சுவரை ஒரு கூர்மையான கத்திக்கொண்டு வெட்டுவது போல சின்ன சிறிய சிறிய Damage – களை உருவாக்குகிறது. இந்த சிறிய சிறிய Damage – தான் பின்னாளில் நமக்கு இதய அடைப்பு வருவதற்கான அடிப்படை.
Fast Food – மிக முக்கியமான ஒரு காரணம், Fast Food பொறுத்தவரை நாம் எத்தனை முறை Fast Food எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்து நம்முடைய பாதிப்புகளும் தெரியவரும்.
20 நிமிடத்தில் தயாரித்த உணவை உண்டு, நம்முடைய வாழ்வில் 20 ஆண்டுகளை இழப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்.
Stress — Silent Killer
Stress என்பது ஒரு சாதாரண விஷயம் போன்று உங்களுக்கு தோன்றலாம் அது உங்களுடைய இதயத்தை நேரடியாக பாதிக்கிறது. Continuous Stress இருந்தால் அது உங்களுடைய Sympathetic Nervous System -ஐ எப்போதும் விழிப்பாக வைத்திருக்கும் .
பொதுவாக Sympathetic Nervous System எங்கெல்லாம் பயன்படுகிறது என்றால் உங்கள்
பரிச்சையில் கடைசி ஐந்து நிமிடங்கள் அதாவது வேகம் அதிகரிக்கும்,
சாலையை கடக்கும் போது திடீரென்று லாரி வந்தால் அனிச்சை செயலாக கால்கள் தானாக ஓடும்,
யாராவது திடீரென்று தாக்க வந்தால் உடனடியாக ஓட வைக்கும் அல்லது திரும்பி சண்டையிட வைக்கும்.
இதைப்போல மிக முக்கியமான காலகட்டத்தில் மட்டும் தேவைப்படும் Sympathetic Nervous System எப்போதும் ON என்ற நிலையில் வைத்திருந்தால் அது நம்முடைய உடலில் Adreline அதிகரிக்கும் அதனால் Blood Pressure அதிகரிக்கும், கூடவே உங்களுடைய இதயத் துடிப்பையும் அதிகரிக்கும்.
Stress என்பது ஒரு Silent Killer (Heart Attack காரணங்கள்)
அமர்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை
நாம் இப்போது என்னதான் நாகரீகம் அடைந்திருந்தாலும் அடிப்படையில் நாம் காடுகளில் சுற்றி திரிந்த மனிதர்கள். அப்போது நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் நாம் பிழைத்திருப்பது என்பது நம்முடைய இடப்பெயர்ச்சி Movement – ஐ பொறுத்தது.
ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் நாம் எங்குமே Movement இல்லாமல் உட்கார்ந்து கொண்டே பார்க்கும் வேலையை செய்ய வேண்டி இருக்கிறது. அடிப்படையில் ஓடி ஆடி வேலை செய்ய வேண்டிய வகையில் நம்முடைய உடல் Design செய்யப்பட்டிருக்கிறது.
அப்படி இருக்கையில் உட்கார்ந்து இருப்பது நம்முடைய உடம்புக்கு Rest என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். நம்முடைய Body – க்கு தேவை Constant Movement. சுருக்கமாக சொல்வது என்றால் எட்டு மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து இருக்கும்போது ரத்த அழுத்தம் (Blood Pressure) அதிகமாகும். நீண்ட காலம் இது தொடரும்போது இதை அடைப்பு நடப்பதற்கான வாய்ப்பை இரண்டு மடங்காக அதிகமாக்கும்.
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 30 மணி நேரம் Walking – செய்யவில்லை என்றால் அவனுக்கு Heart Attack வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் வரை அதிகமாக இருக்கிறது என WHO Warning கொடுத்திருக்கிறது. (Heart Attack காரணங்கள்)
Smoking — Slow Poison (Heart Attack காரணங்கள்)
சிகரெட்(Cigrate) குடிக்கும் போது அது உங்களுக்கு ஒரு விதமான நல்ல உணர்வை தரலாம், But அதனால் ஏற்படும் சேதம் மிக மிக அதிகம்.
ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் (Cigrate) தான் குடிக்கிறேன் என்ன செய்து விடப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு நாளில் ஒரு சிகரெட் கூட 40 சதவீதம் உங்களுடைய Heart Attack Risk ஐ அதிகரிக்கும்.
சிகரெட் புகையில் உள்ள ரசாயனங்கள் உங்கள் ரத்த குழாய்களை சுருக்கும். இதனால் ரத்த ஓட்டம் குறையும்.
இது போதாது என்று அடுத்ததாக சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்ற பொருள் உங்களுடைய ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதய துடிப்பை சில நொடிகளில் அதிகரிக்கும். இது நீங்கள் இதயம் மீது கொடுக்கும் அதிகப்படியான அழுத்தம் இதயத்திற்கு இது இன்னொரு Additional வேலை (இதயத்திற்கு ஏற்கனவே எவ்வளவு வேலை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது)
சிகரெட் புகையில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை குறைத்து விடுவதால் இதயம் மற்றும் மூளைக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் இரண்டும் சிரமப்படும்.
மிகவும் சுலபமாக புரிந்து கொள்வதென்றால்
சிகரெட் புகை ரத்த குழாய்களை அடைக்கும்
BP அதிகமாக்கும், இதயத்துடிப்பு அதிகமாக்கும்
இதயத்திற்கும் மூளைக்கும் சொல்லும் ஆக்சிஜன் அளவை குறைக்கும்.
Heart Attack Symptoms
நாம் எல்லோரும் நம்பி கொண்டு இருப்பது Heart Attack வந்த பின், நாம் நம்ம மார்பு பிடிச்சுக்கிட்டு வலியை உணருவோம் என்று , திரைப்படங்களில் வேண்டுமென்றால் அதுபோல் நடக்கலாம் நிஜத்தில் Heart Attack Symptoms ரொம்ப குழப்பமாக இருக்கும் .
பொதுவாக நம் எல்லோருக்கும் Heart Attack Symptoms என்று சொல்லப்படுவது !
மார்பில் அழுத்தம் அதாவது ஒரு கல்லை வைத்து அடுத்துகிற மாதிரி ஒரு உணர்வு
இடது கையில் அல்லது தோள்பட்டையில் வலி
மூச்சு விட திணறுவது
குளிர்ந்த நிலையில் உடல் இருக்கும்போது வியர்வை வருவது
தலை சுற்றுவது
இவற்றையெல்லாம் கொண்டு நாம் மிகவும் அதிவேகமாக உறுதி செய்ய முடியும்.
Heart Attack Silent Symptoms
இந்த அறிகுறிகளை நாம் பொதுவாக நிராகரித்து விடுவோம்.
உடம்புக்கு என்ன என்று தெரியாமல் உடம்பு சோர்வாக இருப்பது
இதயத்தில் லேசான எரிச்சல் போன்ற உணர்வு
சாப்பாடு செரிக்காதது போல கூட உணர்வு
காரணமே இல்லாமல் பரபரப்பாக இருப்பது
நீரழிவு நோய் இருப்பவர்களுக்கு இது மிகவும் ஆபத்து. அவர்களுக்கு எப்போதும் Silent Symptoms மட்டுமே 70% தெரியும். அவர்கள் இன்னும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Heart attack prevention
Heart Attack பொறுத்தவரை நாம் தினசரி எடுக்கும் சில முடிவுகளை, சில வாழ்க்கை நடைமுறைகளை மாற்றுவதன் மூலம் பெரிய மாற்றங்களை கொண்டுவர முடியும்.
Fast Food க்கு பதிலாக வீட்டிலேயே செய்யப்பட்ட சுத்தமான உணவு
30 நிமிடம் நன்றாக நடப்பது இதனால் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும், Blood Pressure குறையும், எடையும் கட்டுக்குள் இருக்கும்.
ஏழு முதல் எட்டு மணி நேரம் நல்ல தூக்கம் – நல்ல நன்றாக தூங்கினால் உங்களுடைய இதயத்திற்கு ஓய்வு கிடைக்கும்
மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்வது
ஆழ்ந்து மூச்சு விடுவது, பிடித்த இசையை கேட்பது, தியானம் செய்வது இவை எல்லாமே ஏதாவது ஒரு வகையில் உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும்.
வருடத்திற்கு ஒருமுறை Health Checkup செய்வது
No Smoking
ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் மட்டுமே என்றெல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கக்கூடாது சிகரெட்டை முழுமையாக விட்டு விட வேண்டும் இது இதயத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய பாதுகாப்பு.
முடிவு — இதயம் நம் Engine
உன்னுடைய அன்பு இதயத்திற்காக
Heart Attack 100% தடுக்க முடியுமா என்றால் முடியாது, ஆனால் அது வருவதற்கனா வாய்ப்புகளை 80 % வரை நம்முடைய பழக்கவழக்கங்களால் குறைக்க முடியும்.
இதயம் நம்முடைய வாழ்க்கையின் Engine
காரை சரியாக பராமரித்தால் தான் அது நம்முடன் அதிக தூரம் பயணிக்கும்
அதேபோல இதயத்தை நாம் சரியாக பராமரித்தால் மட்டுமே வாழ்க்கை பயணம் நீண்டு அழகாக அற்புதமாக மாறும்.
Source 1 Heart Attack காரணங்கள்
World Health Organization (WHO) — Cardiovascular diseases (CVDs) fact sheet:
Sources 2 Heart Attack காரணங்கள்




