ஆரோக்கியம்வீட்டு மருத்துவம்
இரவில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் 9 நன்மைகள்
பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டை பற்றிய யாருக்கும் தெரியாத அதிசய குணங்கள்
தினமும் நம்மில் பலர் நம் உடலில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு மாத்திரையை எடுத்துக் கள்கிறோம்.
உதாரணத்திற்கு மலச்சிக்கல் , சரியான தூக்கமின்மை, மூட்டு வலி, சர்க்கரை நோய் இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வாழப் பழகி விட்டோம்.
இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஒரே ஒரு பூண்டு பல் மட்டுமே இதை அனைத்தையும் சரி செய்யக் கூடியது. இவ்வளவு அதிசயங்கள் இருக்கிற இந்த பூண்டு நம் முன்னோர்களால் எப்போதும் பயன்படுத்தப்பட்டு வந்த ஒன்று. இப்போதும் இந்த காலத்திலும் இதனுடைய மருத்துவ
குணங்கள் அறிவில் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல இதனுடைய நன்மைகளை சொல்ல இந்த ஒரு பக்கம் பத்தாது.
நீங்கள் கடைபிடிக்கப் போகும் ஒரு சின்னஞ்சிறிய ஒரு நல்ல பழக்கம் உங்கள் வாழ்வில் எவ்வளவு நன்மைகளை மாற்றங்களை கொண்டு வரப் போகிறது என்று பார்ப்போம்.
தினமும் இரவில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
1. முதலில் இது உங்கள் உடலின் பாதிப்புகளை அல்ல பாதிப்பிற்கு காரணமான விஷயங்களை சரி செய்யும்
2. உங்களுடைய உடலின் உறுப்புகளை அனைத்தையும் பாதுகாக்கும்.
3. உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகளை வெளியேற்றும்.
3. உடலின் ஹார்மோன் சமநிலையை உருவாக்கும்
4. பூண்டு சாப்பிடுவதால் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிற சமயத்திலேயே உங்க உடலில் உள்ள தேவையில்லாத பாக்டீரியாக்களை அழிக்கும்.
இது நம் வாழ்க்கை நடைமுறையில் நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கிற , அதே சமயம் விலை மலிவான, மிகவும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த பழக்கம்.
நடைமுறையில் இப்போதும் நிறைய மக்கள் இந்த பூண்டு சாப்பிடும் பழக்கத்துடன் இருந்தாலும் அதை அவர்கள் சரிவர செய்வதில்லை.
பூண்டை எப்படி சாப்பிட வேண்டும்?
பூண்டை உரித்த உடனே அதை அப்படியே மாத்திரை போல் விழுங்கி விடக்கூடாது. ஒரு பூண்டை உரித்து அதை மைய அரைத்து 20 நிமிடம் அதை அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு அதை மென்று விழுங்கலாம், ஆனால் இப்படி செய்யும் பது சற்று நெஞ்செரிச்சல் உண்டாகும்.
எனவே அதை சிறிய சிறிய பகுதியாக மாத்திரை போல தண்ணீரைக் கொண்டு எடுத்துக் கொள்ளலாம்.
இரவில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
இரவு நேரத்தில் நம்முடைய கல்லீரல் ஒரு சுத்தப்படுத்தும் இயந்திரம் போல செயல்பட்டு நம் உடலை சுத்திகரிக்கும், அப்போது பூண்டானது நம்முடைய கல்லீரலுக்கு உதவி செய்யும் விதமாக கெட்ட கொழுப்புகளையும், அதிகப்படியான கொழுப்புகளையும் வெளியேற்றுவதுடன், தேவை இல்லாத கழிவுகளையும் வெளியேற்று உதவி செய்கிறது. இதற்கென்று அதிக விலை கொடுத்து நாம் எந்த Detox பானங்களையும் வாங்கத் தேவையில்லை.
அதேபோல நம்முடைய கல்லீரல் நாம் தூங்கிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் ரத்தத்தையும் சுத்தப்படுத்தும் . அந்த சமயத்திலும் நம்முடைய பூண்டு அதற்கு உதவியாக இருக்கிறது.
வருடக் கணக்கில் ரத்த அழுத்த பிரச்சனைக்காக BP மாத்திரை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கூட இரவில் பூண்டு சாப்பிடுவதால் இதை சரி செய்து கொள்ள முடியும். நம்முடைய பூண்டு இரவு நேரத்தில் ரத்தக்குழாய்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது இதயத்தில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. மாதக்கணக்கில் இல்லை வெறும் ஏழு நாட்கள் இந்த முறையில் பூண்டு எடுத்துக் கொண்டாலே இரத்த அழுத்தத்தில் மாற்றம் தெரியும். இதனால் உங்கள் மன அழுத்தமும் குறையும்.
சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உதவுகிறது. நீங்கள் சாப்பிட்டவுடன் உடலில் ஏற்படும் உடனடி சர்க்கரை உயரும் மாற்ற அளவை இது கட்டுப்படுத்துகிறது. பூண்டு சாப்பிடுவதால் -தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டு வந்தாலே இந்த மாற்றங்களை நீங்கள் உணர முடியும்.
பூண்டு சாப்பிடுவதால் இரவில் ஏற்படும் பசியும் ஓரளவுக்கு இது கட்டுப்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகள் காலை எழுந்த உடனே சிறிது சோர்வாக தான் இருப்பார்கள், அதையும் பூண்டு சரி செய்யும்.
யாருக்கும் வரக்கூடாது ஒரு சிக்கல் மலச்சிக்கல் , பூண்டு சாப்பிடுவதால் பூண்டு நம் குடல் பகுதியில் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் . அதே சமயம் மோசமான பாக்டீரியாக்களை அழிக்கும்.
உடலில் ஏற்படும் மலச்சிக்கலையும், வாயு பிரச்சனையும் இது சரி செய்கிறது. Constipation பிரச்சனையும் சரி செய்கிறது. இரவு சாப்பிட்டு உடன் சிலருக்கு ஏற்படும் வயிற்று உப்புசம், வாயு தொல்லை இவற்றையும் இது சரி செய்யும்.
சைனஸ், அடிக்கடி சளி பிடிப்பது, இருமல், மூக்கடைப்பு, Dust allergy போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் இந்த பூண்டு அற்புதமான மருந்து.
பூண்டு ஒரு ஆன்ட்டிபயாட்டிக் தன்மை கொண்டது. இரவு நேரத்தில் நம்முடைய வெள்ளை அணுக்கள் நோய்க் கிருமிகளை அழிக்கும் போது அதற்கு மிகப்பெரிய உதவியாக இருப்பது பூண்டு.
வெறும் ஒரு பூண்டை இரவில் சாப்பிடுவதன் மூலமாக மட்டுமே நம்முடைய உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை அற்புதமாக மாற்றியமைக்க முடியும்.
பூண்டு ஒரு இயற்கையான வலி நிவாரணி அதாவது Natural Pain Killer
ஒரு பூண்டு பல் இரவின் சாப்பிடுவதன் மூலமாகவே உங்கள் உடலில் ஏற்படும் மூட்டு வலி மற்றும் உடல் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றை தடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல் தசை நார்களில் ஏற்படும் வலி முதுகுத்தண்டில் ஏற்படும் வலி போன்றவற்றிலும் இதன்மூலம் சரி செய்ய முடியும். இதன் மூலம் வலிகள் எதுவும் இல்லாத நிம்மதியான உறக்கத்தை நீங்கள் பெற முடியும்.
நம்மில் சிலருக்கு நிம்மதியான தூக்கம் வராது, இரவில் மன அழுத்தம் காரணமாக இது பொதுவாக ஏற்படும்,
நமது நரம்பு பட்ட இடத்தை அமைதிப்படுத்தும், பூண்டு சாப்பிடுவதால் Cortisol எனப்படும் கட்டுப்படுத்தி குறைக்கிறது. இதனால் நம் சாப்பிடும் பூண்டு நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்திற்கு நம்மை கூட்டிச் செல்லும். இதனால் தேவையில்லாமல் யோசிப்பவர்கள், பயப்படுபவர்கள், கவலைப்படுபவர்கள், மன அழுத்தம் உடையவர்கள் எல்லோரும் நிம்மதியாக தூங்க முடியும்.
அடுத்து உடல் எடை , இரவில் நான் சாப்பிடும் பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை உடைத்து வெளியேற்றும், அதே சமயத்தில் பூண்டு சாப்பிடுவதால் சர்க்கரை சார்ந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தை குறைக்கும்.
நீங்கள் எடுக்கும் உணவு பொருளை சத்தியமாக மாற்றும் வேலையை உண்டானது ஊக்குவிக்கிறது, 35 வயதுக்கு மேல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் தொப்பை வராமல் தடுக்கவும் , வந்தவர்கள் தொடர்ந்து பூண்டு எடுத்துக் கொண்டு வர அதை குறைக்கவும் உதவுகிறது.
ஏன் பூண்டை 20 நிமிடம் கழித்து எடுத்துக் கொள்ள வேண்டும்?
நம் முன்னரே புரியுது போல பூண்டை உரித்து உடனே சாப்பிடாமல் அதை அரைத்து 20 நிமிடம் வைத்திருக்கும் போது அதில் Allicin என்பது உருவாகும். இது நம்முடைய உடலில் புற்றுநோய் – கேன்சர் உருவாக்கும் செல்களை முன்கூட்டியே அழிக்கக் கூடியது.
சிலருக்கு அவர்களுடைய மரபில் அதாவது தாத்தா பாட்டிக்கோ அல்லது அம்மா அப்பாவுக்கு புற்றுநோய் இருந்திருக்கலாம். அப்படி இருப்பவர்கள் தினமும் பூண்டை இப்படி எடுத்துக் கொள்வதன் மூலம் அப்படிப்பட்ட செல்கள் உருவாவதை தடுக்க முடியும்.
இது பன்ற மரபு பிரச்சனை இல்லாதவர்களும், பூண்டை எடுத்துக் கொள்வதன் மூலம் இது நம் உடலை புற்றுநோய் செல்களில் இருந்து காக்கும் ஒரு அரணாக அமையும்.
யாரெல்லாம் பூண்டை சாப்பிடலாம்?
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூண்டை இப்படி எடுத்துக் கொள்ளலாம், இது ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
மலச்சிக்கல், வாயு தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.
மூட்டு வலியுள்ளவர்கள், தூக்கம் இல்லாதவர்கள் , உடலில் எடை அதிகம் உள்ளதால் சிரமப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளலாம்
மரபு வழி கேன்சர் பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
யார் யாரெல்லாம் பூண்டு எடுத்துக் கொள்ளக் கூடாது?
குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை கண்டிப்பா எடுத்துக் கொள்ளக் கூடாது, ஏனென்றால் இது மேலும் ரத்த அழுத்தத்தை குறைத்து வடக்கூடும்.
அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது.
கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது.
இரவு உணவு எடுத்துக்கொண்ட பிறகு 30 முதல் 45 நிமிடங்கள் கழித்து ஒரு பல் பூண்டை நம் மேற்கூறியபடி அரைத்து 20 நிமிடம் கழித்து எடுத்துக் கொள்ளலாம்.
முடிவுரை
எவ்வளவோ மருந்துகளை எடுத்துக் கண்டு சிரமப்பட்டு கொண்டிருக்கும் பலருக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையும், மலச்சிக்கல் உள்ளவர்கள், சரியாக தூக்கம் இல்லாதவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அனைவரும் போன்ற எடுத்துக் கொள்வதன் மூலம் ஓரிரு மாதங்களிலேயே நல்ல மாற்றங்களை உணர முடியும்.
நன்றி
பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்