ஓம் மந்திரத்தின் நன்மைகள்
ஓம் மந்திரம் என்றால் என்ன? அதை ஏன் பிரணவம் மந்திரம் என்று சொல்கிறார்கள் ?
ஓம் என்பது இந்த உலகில் மிகவும் பழமையானதும், அதேசமயம் சக்தி வாய்ந்ததுமான ஒளி எதிர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஓம் என்ற ஒலி பிரபஞ்சத்தின் ஆரம்ப அதிர்வை குறிப்பதாக இந்திய மரபு காலம் காலமாக சொல்லி வருகிறது.
ஆராய்ச்சிகளும் கூட ஓம் என்ற சப்தம் உடலுக்கும் மற்றும் மன அமைதிக்கும் உதவி செய்வதாக கூறுகின்றன.
ஓம் உச்சரிப்பது ஏன் ஒரு கலை? குருவின் பங்கு
பழைய காலங்களில் மந்திரம் அதனுடைய பலன்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவையாக இருக்கவில்லை, ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே குருவை தேடிச்சென்று அவர் மூலமாக கற்றுக்கள்ள முடியும்.
ஏனென்றால் ஒரு மந்திரத்தின் முழு பலன்கள்
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது எவ்வளவு நீளமாக உச்சரிக்கப்படுகிறது அதிர்வு, சுவாசத்தை எவ்வாறு இழுத்து விடுவது, உச்சரிப்பின் ஆழம் என பல விஷயங்களைப் பொறுத்து அமைகிறது.
இன்று நிலைமைகள் வேறு, குரு கிடைக்காதவர்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு அதை மெதுமெதுவாக தொடங்கலாம்.
ஓம் என்பதை எப்படி சரியாக உச்சரிப்பது
பொதுவாக நாம் உச்சரிக்கும் போது
OOOOMmmmmmmmmmm
ஓ நீளமாக, ம் அதிர்வை அதிகம் உணரும்படி
தொடக்கத்தில் ஒரு 12 முறை என்று ஆரம்பித்து, மெது மெதுவாக அதிகப்படுத்தி மூச்சுடன் இணைந்து சொல்ல ஆரம்பிக்கலாம்.
சொல்ல ஆரம்பித்த சில வாரங்களிலேயே நீங்கள் உடலில் ஒரு அதிர்வை மனதில் ஒரு அமைதியை சுவாசத்தில் ஒரு ஆழத்தை உணர ஆரம்பிப்பீர்கள்.
ஓம் உச்சரிக்கும் போது பின்பற்ற வேண்டிய 3 விதிகள்
அமைதியான இடம் பயன்படுத்துதல்
முதலாவது விதி அது அமைதியான இடமாகவும், நீங்கள் தனியாக இருக்கும் இடமாகவும் இருந்தால் நல்லது. பூஜை அறை ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.
முதுகெலும்பை நேராக வைத்திருத்தல்
இரண்டாவது விதி முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். அதற்காக மிகவும் சிரமப்படுத்தி செய்ய வேண்டாம். ஒரு சிலர் மிகவும் நேராக வைக்கிறேன் என்று முதுகெலும்பை பின்புறமாக வளைத்து விடுவார்கள். சிரமம் இல்லாமல் முதுகெலும்பு நேராக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள் அதுவே போதுமானது.
பத்மாசனம் / சுகாசனம் பயன்படுத்துதல்
மூன்றாவது விதி நீங்க அமர்ந்திருக்கும் ஆசனம் பத்மாசனம் ஆக இருந்தால் நல்லது ஆனால் எல்லோருக்கும் பத்மாசனம் ஒத்து வராது. அதற்கு சிறிது காலம் பயிற்சி செய்து முயற்சி செய்யலாம். சுகாசனமே போதுமானது. நீங்கள் தரையில் எப்படி சாப்பிட அமர்வீர்களோ அதுவே சுகாசனம்.

ஓம் மந்திரத்தின் நன்மைகள்
ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்
1. மன அழுத்தம் குறைவு & மன அமைதி அதிகரிப்பு
ஓம் என்று மந்திரத்தை மெதுவாக ஜெபிக்க ஆரம்பிக்கும் போது உடலில் இருக்கும் பதட்டங்கள் தணிந்து மூளை ஒரு ஆழ்ந்த அமைதியான நிலைக்கு செல்ல ஆரம்பிக்கின்றது.
பல ஆய்வுகளில் ஓம் மந்திரத்தை போன்ற நீண்ட அதிர்வலைகள் உடம்பில் நரம்பு அழுத்தத்தை குறைத்து மனதை சாந்திப்படுத்துவதாக கூறுகின்றது.
(உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும் மன அழுத்தம் என்பது ஒரு அமைதியான ஆட்கொள்ளி)
ஓம் என்று மந்திரத்தை பொறுமையாக ஜெபிக்கும் போது நீண்ட கால அளவில் அது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.
2.மூளையில் ஆல்பா அலைகள் அதிகரித்து அமைதியும் அதிகரிக்கும்
ஓம் என்ற மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கும் போது அது ஏற்படும் அதிர்வு மூளையில் ஆல்பா வெப்சை அதிகரிக்கிறது. இந்த ஆல்பா வெஸ் பொதுவாக படைப்பாற்றல், மற்றும் ஆழ்ந்த கவனத்துடன் தொடர்புடையது. நீங்கள் ஆல்ஃபா நிலையில் இருக்கும் போது உங்கள் மனம் மிகவும் லேசாகவும் , தெளிவாகவும் இருக்கும்
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் எப்போதும் பீட்டா நிலையில் தான் இருப்போம்.
விஞ்ஞானிகளும், ஞானிகளும் எப்போதும் ஆல்ஃபா நிலையிலேயே இருப்பார்கள்.
ஆல்ஃபா நிலையில் நம்முடைய கேள்விகளுக்கு பதில்களும் கிடைப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.
3.என்டர்பின் சுரப்பு நாள் முழுதும் உற்சாகமான ஒரு உணர்வு
ஓம் என்று மந்திரத்தை உச்சரிக்கும் போது ஏற்படும் அதிர்வு ஹேப்பி ஹார்மோன் என்று அழைக்கப்படும் என்டர்பின் ஹார்மோனை சுரக்கிறது.
இது உங்கள் மனதிற்கு நாள் முழுவதும் உற்சாகம் தரும், உடலுக்கு லேசான உணர்வு மற்றும் தெளிவான சிந்தனை கொடுத்து உங்களை ஹேப்பியாக வைத்திருக்கும்.
4.ஆழ்ந்த உறக்கம் தரும் (ஓம் மந்திரத்தின் நன்மைகள்)
ஓம் சாந்தி Para Sympathitic Nervous System செயல்படுத்துகிறது இதனால் உனக்கு ஆழ்ந்த உறக்கம் ஏற்படும், Melatonin சமநிலையை எளிதாக்குகிறது – Melatonin சமநிலை என்பது ஆழ்ந்த உறக்கத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று.
5.நுரையீரலில் சக்தி அதிகரிக்கும் உங்கள் சுவாசமும் ஆழமாகும்
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது நீங்கள் மிக மெதுவாக நீளமாக சொல்கிறீர்கள். அதனால் உங்களுடைய நுரையீரலின் ஆழம் வரை காற்று செல்ல முடிகிறது.
நீண்ட காலத்தில் இது உங்களுடைய நுரையீரலின் சக்தியை அதாவது Lung capacity-யை மேம்படுத்தும்
இதனால் நுரையீரலுக்கு அதிக ஆச்சரியம் கிடைக்கும். ஒவ்வொரு முறை ஜெபிக்கும்போது நுரையீரலில் லேசான புத்துணர்ச்சி ஏற்படுவதை நீங்கள் உணரலாம்.
6.உடல் வலி குறைகிறது – ஓம் மந்திரத்தின் நன்மைகள்
ஓம் மந்திரத்தை ஜெபிக்கும் பது உங்கள் உடலில் ஏற்படும் மெல்லியாக அதிர்வு உங்களுடைய உடலின் தசைகள் மற்றும் மூட்டுகளில் ஒரு மைக்ரோவப் வைப்ரேஷன் ஏற்படுத்துகிறது.
இதனால் உடலில் ஏற்படும் வலிகள் ஓரளவு குறைகிறது.
7.மனம் தானாகவே மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிக்கும்
தொடக்க காலங்களில் நீங்கள் ஓம் என்று மந்திரத்தை கான்ஷீசாக உச்சரிக்க முயற்சி செய்வீர்கள் ஆனால் சில நாட்களில் நீங்கள் அமைதியாக இருக்கும் போது உங்கள் மனம் தானாக ஓம் உச்சரிக்க ஆரம்பிக்கும். இது ஒரு இயல்பான நிலை தான்.
ஓம் என்ற மந்திரத்தை எத்தனை முறை சொல்ல வேண்டும் (ஓம் மந்திரத்தின் நன்மைகள்)
பலரும் பல எண்ணிக்கைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் பத்து முறை சில நாட்களில் 21 முறை என்று அதிகப்படுத்தி 48 வரை சென்று, 108 வரை முயற்சி செய்யலாம்.
மெது மெதுவாக அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலம் – தரம் முக்கியம், எண்ணிக்கை முக்கியமல்ல
எண்ணிக்கை என்பது ஒரு அளவு மட்டுமே ஆனால் நீங்கள் எந்த அளவுக்கு மந்திரத்தை சரியாக ஒரே மாதிரியாக உச்சரிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அதன் பலன்கள் உள்ளது.
ஒரு நாள் 108 முறை சரியாக செய்து விட்டு அடுத்த நாள் அவசர அவசரமாக நீங்கள் மந்திரத்தை ஜெபிப்பதால் எந்த மாற்றங்களும் நிகழ்ந்து விடப் போவதில்லை. நேரம் குறைவாக இருந்தால் குறைவாக செய்யுங்கள் நிறைவாக உச்சரியங்கள். உங்கள் மனதுக்கு தெரியும் நீங்கள் சரியாக செய்கிறீர்களா என்று உங்கள் மனமே உங்களுக்கு குரு.
Tonoscope உருவாக்கும் சக்தி சக்கரம்
நாம் என்ன சொல்லி உச்சரித்தாலும் அதை வடிவமாக காட்டும் டொனுஸகோ என்ற கருவி உள்ளது. அந்த Tonoscope கருவியில் ஓம் என்று உச்சரிக்கையில் சில வடிவங்கள் தோன்றுகிறது. அதைப் பார்ப்பதற்கு ஸ்ரீ சக்கரம் போலவே இருப்பதாக பலரும் அனுமானிக்கிறார்கள்.
ஸ்ரீ சக்கரம் என்பது நம்முடைய பாரம்பரிய படி நம்முடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.
தமிழ் ஒரு மந்திர மொழி
இவ்வளவு நல்ல பலன்கள் இருக்கும் இந்த ஓம் என்ற சப்தத்தை நம்முடைய மொழியில் நம்முடைய மூதாதையர்கள் நமக்கே தெரியாமல் பல இடங்களில் பயன்படும்படி செய்திருக்கிறார்கள்.
நாம் இப்போதும் பல வேலைகளில் நாம் உச்சரிக்கும் சொல்கள் ஓம் என்று முடியும் படி இருக்கும்
கவனித்துப் பார்த்தால்
செல்வோம், போவோம், வருவோம், கொடுப்போம், எடுப்போம்
என்று இருப்பதை நீங்கள் உணர முடியும்
இலங்கைத் தமிழில் ஆம் என்ற சொல்லுக்கு அவர்கள் ஓம் என்று தான் சொல்வார்கள்.
அது நம்முடைய பாரம்பரிய தமிழ்.
முடிவாக தினமும் சில நிமிடங்கள் நாம் ஓம் என்று மந்திரத்தை உச்சரிக்கும் போது அது நமக்கு மன அமைதி நல்ல உறக்கம் சுவாசத்தில் மேம்பாடு என பல பலன்களை தருகிறது.
பொதுவாக நீங்கள் சிறிது சிறிதாக முயற்சிக்கும் போதே அது உங்களுக்கு சரியான படி எப்படி உச்சரிப்பது என்று தெரிந்துவிடும்.
சரியான அளவில் சரியான அதிர்வில் சரியான நீளத்தில் நீங்கள் உச்சரிக்கும் போது அதனுடைய பலன்கள் மிகவும் அதிகம்.
Source 1 ஓம் மந்திரத்தின் நன்மைகள்
பிரணவ மந்திரமான “ஓம்” பற்றிய மிகப் பழமையான ஆன்மீக ஆதாரம்.
Source 2 : ஓம் மந்திரத்தின் நன்மைகள்
International Journal of Yoga (2011)




