அளவோடு மாமிசம் சாப்பிட வேண்டும்
நாள் ஒன்றுக்கு இந்தியாவைப் பொறுத்தவரை 200 கிராம் அளவுக்கு மேல் மாமிசம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
கோழிக்கறி, முட்டை, மீன் போன்ற இறைச்சி உணவுகள் யூரிக் ஆசிட் அளவை அதிகரிப்பதால் கல் உருவாகும்.
மாதுளை சாறு
ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த மாதுளை சாறு, சிறுநீரக நச்சு நீக்கத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் படிக உருவாக்கத்தையும் குறைக்கிறது. வழக்கமான நுகர்வு சிறுநீரக ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் சிறுநீரக கற்கள் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும். இது சிறுநீரக கற்களுக்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும் .
துளசி (துளசி)
துளசி இலைகள் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகின்றன, இது யூரிக் அமிலக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். கூடுதலாக, துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை சிறுநீரகக் கற்களால் ஏற்படும் அசௌகரியத்தைப் போக்கக்கூடும். இது சிறுநீரகக் கற்களுக்கு ஒரு பழங்கால இயற்கை தீர்வாகும்.
உடற்பயிற்சி செய்ய வேண்டும்
குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைப்பது, சிறுநீரை கல் உருவாகாமல் பாதுகாக்கும்.
காபி மற்றும் ஆல்கஹால் அதிகமாக எடுத்துக் கொள்வது
காபி மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இது உடலில் நீரிழப்பு உருவாகி அதன் மூலம் சிறுநீரக கல் உருவாகிறது.
சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்கும் 10 வகையான உணவுகள்
சிறுநீரை பெருக்கும் தன்மை உள்ள வாழைத்தண்டு, பொதுவாக வாழைத்தண்டு சிறுநீரக கல்லை உடைத்து வெளியேற்றும் தன்மை உடையது. சிறுநீரக கல் 3mm அளவு இருக்கும் போது சிறுநீரை பெருக்கும் உணவுகளைக் கொண்டே அந்தக் கல் வெளியாகும்படி செய்யலாம். 7mm அல்லது 8mm அளவு இருக்கும் போது நாம் கண்டிப்பாக மருத்துவரை நாடியே ஆக வேண்டும்.
பார்லி கஞ்சி, சுரைக்காய் போன்றவையும் சிறுநீரை பெருக்கும் உணவுகள்
சிறுநீரில் உள்ள ஆக்சிடென்ட் கல்லை கரைக்க உதவும் எலுமிச்சை
சிறுநீரை சுத்தம் செய்யும் மோர்
பொட்டாசியமும், மக்னீசியமும் அதிகம் உள்ள இளநீர்
சிறுநீரக கக்ற்களின் படியங்களை தடுக்கும் பாகற்காய்
சிறுநீரகக் கல் உருவாக தேவைப்படும் பைப்ரினை சிதைக்கும் பைனாப்பிள் சாறு
சிறுநீரில் பாதிப்பை குறைக்கும் பச்சை காய்கறிகள்
சிறுநீரின் செயல்பாட்டை மேம்படுத்தும் முந்திரி
வலியை குறைக்கும் மஞ்சள் மற்றும் இஞ்சி
சிறுநீரகக் கல் உருவாக காரணமாக இருக்கும் உணவுகள்
பசலைக் கீரை, வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகள், சாக்லேட் போன்றவற்றில் ஆக்ஸிலேட் அதிகம் உள்ளது
காப்பி மற்றும் குளிர்பானங்கள் மதுபானங்கள் உடலில் நீரிழிப்பை அதிக அதிகப்படுத்தும்.
உப்பு மற்றும் உப்பு அதிகம் உள்ள ஊறுகாய்கள்
தக்காளி பழத்தில் உள்ள ஆக்சாலிக் அமிலம் கால்சியத்துடன் சேர்ந்து கல் உருவாக காரணமாகிறது, தக்காளி மட்டுமல்ல முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகளையும் தவிர்க்க வேண்டும்.
முடிவுரை
இதை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சிறுநீரகக் கல் என்ற வலியை உணர்ந்து இருந்தால், நீங்கள் மாற்றத்திற்கு கண்டிப்பாக தயாராக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
எனவே தினசரி பழக்கங்களில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்
அதிக தண்ணீர் குடிப்பது, உப்பை குறைவாக எடுத்துக் கொள்வது, மாமிசம் அளவாக எடுத்துக் கொள்வது, பழங்கள் காய்கறிகள் அதிகமாக எடுத்துக் கொள்வது,
சிறுநீரகக்கல் என்பது முற்றிலும் தடுக்கக்கூடிய அதே சமயம் சிறுநீரகக் கல் வந்துவிட்டால், அது சரி செய்யக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் உள்ளன. அவற்றை கடைப்பிடிப்பது மூலம் இந்த இந்த சிறுநீரகக் கல் பிரச்சனையை தடுக்கலாம்.