
21 நாளில் முகம் பொலிவுறும்
பளபளப்பான ஆரோக்கியமான சருமம் என்பது அழகின் அடையாளம் மட்டுமல்ல அது உடல் நலத்தின் ஒரு வெளிப்பாடாகவும் உள்ளது.
தேவையில்லாத ரசாயனை க்ரீம்களையும் பேசியல் ட்ரீட்மெண்ட்களையும் பயன்படுத்துவதற்கு பதிலாக நம்முடைய பாரம்பரிய வலிகளில் நம் முகத்தை மேலும் ஆரோக்கியமாக மேம்படுத்த முடியும்.
நாம் நாம் ஆச்சரியப்படும் பிரபலங்களும் இதே முறைகளை தான் பயன்படுத்துகிறார்கள்
10 இயற்கையான வழிகள்
மஞ்சள் சேர்ந்த தயிர் மாஸ்க்
மஞ்சளில் உள்ள குர்க்குமின் ஆன்டிபாக்டீரியல் தன்மையுடையது. அதேபோல தயிர் என்பது தோலை மென்மையாக்கி மேலும் பொலிவு தரக் கூடியது. இதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம் அரை டீஸ்பூன் மஞ்சளுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டு அதற்குப் பிறகு கழுவவும்
நயன்தாரா ஒவ்வொரு சூட்டிங் முன்பாகவும் தயிர் பிளஸ் மஞ்சள் சேர்ந்த இந்த முறையை பயன்படுத்துகிறார்
தேன் மற்றும் எலுமிச்சை கலவை
தேனில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட்டும் அடிப்படையில் தோலின் நிறத்தை ஒளிர செய்கிறது
இதை செய்வதற்கு ஒரு ஸ்பூன் தேனுடன் ஐந்து சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடம் விட்டு பிறகு கழுவி விட வேண்டும்
நம் எல்லோருக்கும் தெரிந்த ஹிந்தி நடிகை ஆலியா பட் இந்த தேன் மற்றும் எலுமிச்சை கலவையை உடனடியாக பொலிவு பெற பயன்படுத்துகிறார்.
வெறும் பசும்பால்
பசும்பால் இயற்கையிலேயே உள்ள ஒரு கிளன்சர் போல செயல்பட்டு நம்முடைய தோலின் மெலனின் அளவை சமநிலைப்படுத்துகிறது.
இதை எப்படி செய்வது என்று பார்த்தால் ஒரு பஞ்சு துணியில் பசும்பாலை நனைத்து எடுத்து முகத்தில் தடவி விட வேண்டும் பத்து நிமிடங்கள் விட்டு கழுவ வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நம் எல்லோருக்கும் தெரிந்த ரஸ்மிகா மந்தனா அவருடைய முகத்தை பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாற்றுவதற்கு இதை தான் செய்கிறார்
அலோவேரா ஜெல்
அலோவேரா ஜெல் வெயிலினால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பரு, மந்தமான சருமம் போன்றவற்றை இயற்கையாக குறைக்க கூடியது.
புதிய அலோவேரா இலையை வெட்டி உள்ளே உள்ள ஜெல்லை முகத்தில் தடவவும் இரவெல்லாம் அப்படியே விட்டுவிட்டு காலையில் கழுவும்.
நடிகை மாளவிகா மோகன் இந்த முறையைத்தான் பயன்படுத்துகிறார்.
முந்திரி மற்றும் ரோஸ் வாட்டர் கலவை
வைட்டமின் ஈ அதிகம் உள்ள முந்திரி இயற்கையானது, அதை பயன்படுத்தும் போது அது நம் தோலை பளபளப்பாக்க உதவுகிறது. மூன்று முந்திரி அரைத்து அதை ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் மெதுவாக தடவும்.
இந்த இயற்கையான முறையை நடிகை சாய் பல்லவி பயன்படுத்தி வருகிறார்.

தக்காளி
தக்காளியில் உள்ள Lycopene சூரியகதிர்களால் முகத்தில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும்.
தக்காளிச் சாறு எடுத்து முகத்தில் தடவும் 10 நிமிடங்கள் எடுத்து கழுவிவிட வேண்டும்.
வெந்தயம் சேர்த்து தேங்காய் பால் கலவை
பொதுவாக வெந்தயம் ஆன்ட்டி ஏஜிங் மூலிகை செயல்படக்கூடியது. தேங்காய் பால் உதிர்ந்த தோலை அதன் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க உதவி செய்யும்.
வெந்தயத்தை அரைத்து அதை தேங்காய் பாலுடன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் பொறுத்து அதன் பிறகு கழுவி விட வேண்டும்.
தினமும் 3 லிட்டர் தண்ணீர்
தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். தண்ணீர் குடிப்பதால் மட்டுமே உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறும் உடல் முழுவதும் ஹைட்ரேட் ஆகும் , தளர்ச்சி நீங்கும்.
நடிகை சமந்தா தினமும் 3 லிட்டர் தண்ணீர், குடிப்பதாக கூறுகிறார்.
சூரிய ஒளி பாதுகாப்பு – சந்தனம்
சூரிய ஒளியின் UV கதிர்களை இயற்கையாக தடுக்கும் ஒன்று சந்தனம்.
சந்தனம் மற்றும் பசும்பாலை சேர்த்து வெயிலில் வெளியே செல்வதற்கு முன் சிறிய அளவில் தடவலாம்.
தூக்கம் மற்றும் தியானம்
தினமும் குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும். அதேபோல தினசரி குறைந்தது 15 நிமிடம் ஆவது தியானம் செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டு தியானம்
இதய ஒருங்கிணைவு தியானம்
இதயமும், மூளையும் ஒருங்கிணைந்து செயல்படும் போது பலம் அதிகம்.
சமீபத்திய ஒரு ஆராய்ச்சியில் மூளை மட்டும் அல்ல நம்முடைய இதயமும் சிந்திக்க கூடிய ஒன்றுதான் (ஒரு அளவுக்கு), நம்முடைய மூளையில் ஒரு செயலின் தீவிரம் நூறு மடங்கு என்றால், இதயத்தில் அந்த செயலின் தீவிரம் 5000 மடங்கு இருக்கும், அப்படி என்றால் இரண்டையும் ஒருமுகப்படுத்துவது ஏன் முக்கியம் என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
இதய ஒருங்கிணைவு தியானம் செய்வதன் மூலம் ஒரு முழுமையை நீங்கள் உணரமுடியும், அதாவது இந்த கணத்தில் நீங்கள் வாழ்வீர்கள் அதாவது உங்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற பயமோ !கடந்த கால சம்பவங்களைப் பற்றிய பற்றிய வருத்தமோ !இருக்காது. மிகவும் சுலபமாக சொன்னால் மன உலகில் நீங்கள் எங்கும் ஓடி ஒலிய தேவையில்லை இந்த கணத்தில் முழுமையாக வாழ்வீர்கள்.
இதய ஒருங்கிணைவு செய்ய முதலில் கண்களை மூடிக்கொண்டு இதயத்தை உணருங்கள்.
இதயத்தின் மீது உங்கள் விரலையோ அல்லது கையையோ வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் எங்கு தொடுதல் மூலம் உணர்கிறீர்களோ அங்கு உங்களுடைய முழு கவனமும் இருக்கும்,
இப்போது ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள், இதை நீங்கள் மிக மிக மெதுவாக என்று கூடமெதுவாக என்று கூட புரிந்து கொள்ளலாம் நீங்கள் சுவாசிக்கும் போது நீங்கள் முழு ஓய்வில் இருப்பதாக உங்கள் உடல் உணர ஆரம்பிக்கும். இதை பயிற்சி செய்து உணரும்போது , இந்த உணர்வு மிக ஆச்சரியமாக இருக்கும்.
இப்போது நீங்கள் மிக மிக அமைதியாக இருப்பீர்கள், எப்போதும் இதயத்தை தொட்டு உணர்ந்து அப்படியே உங்கள் வாழ்வில் நீங்கள் எவற்றுக்கெல்லாம், யாருக்கெல்லாம் நன்றி சொல்ல விரும்புகிறீர்களோ அவை எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லுங்கள். அதாவது Gratitude பயிற்சி செய்யுங்கள். இப்போது உங்களுடைய இதயம் நன்றி உணர்வில் திளைத்து இருக்கும்.
அடுத்ததாக நீங்கள் யார் மீது அன்பாக இருக்கிறீர்களோ அவர்களின் முகத்தை மனதில் கொண்டு வந்து அந்த அன்பு உங்கள் இதயத்தில் இருந்து உடல் முழுவதும் நிரப்புவதாக உணருங்கள். இப்போது உங்கள் இதயம் அன்பின் உணர்வில்
திளைத்து இருக்கும்.
அதேபோல உங்களுக்கு யாரையாவது பாராட்ட வேண்டும் என்று தோன்றினாலும் அவர்களுடைய உருவத்தை மனதில் நினைத்து நீங்கள் உங்கள் இதயத்தைத் தொட்டுக் கொண்டு உங்களுடைய பாராட்டுதலை அவருக்கு தெரிவிக்கலாம், இவ்வாறு செய்வது பல மாற்றங்களை நடத்திக் காட்டும்.
ஒருமுறை இதயமும் மூளையும் ஒருங்கிணைந்தால் அடுத்து நான்கு முதல் ஐந்து மணிநேரத்திற்கு ஒருங்கிணைவு உடனே செயல்படும். அதனால் மற்ற படங்களைப் போல் அல்லாமல் இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்கு 3 முறை செய்து கொள்வது நல்லது, எங்கிருந்தாலும் இதை செய்யலாம் என்றால் அதிகபட்சம் இதற்கு தேவைப்படுவது 4 முதல் 5 நிமிடம் தான்.
முன்பே சொன்னது போல Heart coherence செய்யும் போது நீங்கள் ஒரு முழுமையை உணர முடியும்,
உங்கள் மீது உங்களுக்கே ஒரு பற்றுதல் வரும் அதேபோல உலகத்தின் மீது பற்றுதல் ஏற்படும்.
இந்த இதய ஒருங்கிணைவு தியானம் உங்களுக்கு ஒரு ஆழ்ந்த அமைதியை தரும்.
உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க கூடியது இந்த Heart coherence தியானம்.
உங்களுடைய உணர்ச்சிகளை கையாள்வதில் தேர்ந்தவராக மாறிக் கொண்டு இருப்பீர்கள். தொடர் தியானம் இதை சாத்தியப்படுத்தும்.
எல்லோருடனுமான ஒரு ஆழ்ந்த புரிதல் ஏற்படும்.
முடிவுரை
நாம் எல்லோரும் கொண்டாடும் பிரபலங்கள் ரசாயனங்களை பயன்படுத்துவதில்லை , இயற்கை வழிகளில் மூலமாகவே நாம் பளபளப்பான முகத்தை பெற முடியும், அப்படி இயற்கை வழியில் சென்றால் மட்டுமே அது நிலையாகவும் இருக்கும். இந்த பத்து முறைகளில் உங்களுக்கு எது எளிதாகப்படுகிறது அதை செய்யலாம். எது எப்படி இருந்தாலும் தூக்கம் மற்றும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
உங்கள் மேலான கருத்துக்களை கமெண்ட் செய்யவும்.
நன்றி
Sources