ஆரோக்கியம்
7 BEAUTY SECRETS OF SAIPALLAVI : சாய் பல்லவி போல் ஜொலிக்க 7 ரகசியங்கள்
7 BEAUTY SECRETS OF SAIPALLAVI

7 BEAUTY SECRETS OF SAIPALLAVI
சாய்பல்லவி போல் ஜொலிக்க 7 ரகசியங்கள்
சாய்பல்லவியின் அடையாளமே மேக்கப் இல்லாமல் நடிப்பதுதான். இயற்கையாக அவர் எப்படி இருக்கிறாரோ? அப்படியே நடிக்கவும் செய்கிறார்.
சாய் பல்லவி அவரது அழகிற்கான ரகசியங்களை தெரிந்து கொள்வோம். That is
7 BEAUTY SECRETS OF SAIPALLAVI

ஆரோக்கியமான உணவு மற்றும் பழ வகைகள்
பருப்பு வகைகள், தானியங்கள் அதுவும் முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதாக சொல்கிறார்.
எனது உடல் உள்ளுக்குள்ளும், வெளியிலும், பிரகாசிக்க ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளது.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் போது,
சர்ம செல்கள் புதுப்பிக்கப்பட்டு சர்மம் கதிரவன் போல பிரகாசிக்கும், உடலில் உள்ள நச்சுப் பொருள்கள் அனைத்தும் வெளியேறும்.
உணவுடன் தினமும் காய்கறிகள் மற்றும் குறைந்தது ஐந்து பழங்கள் என சேர்த்துக் கொள்ளும்போது ஒரு மாதத்தில் சின்ன சின்ன மாற்றங்களை பார்க்கலாம்.
ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
சாய் பல்லவி தான் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதாகவும் இதன் மூலமாக தன் உடல் மேலும் உயிர்ப்புடன் இருப்பதாக கூறுகிறார்.
உற்பத்தி செய்வதால் உடலில் குலோஜன் அதிகரித்து உடல் இயற்கையான பொலிவுடன் இருக்கும்.
சருமத்தில் நெகிழ்வுத் தன்மை Flexibility அதிகமாகும் .
உடற்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் அதிகம் ரத்த ஓட்டம் அதிகம் போவதால் உடல் இயற்கையாக பிரகாசிக்கும்.
எல்லோரும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டிலேயே யோகா, வாக்கிங், ஜாக்கிங் இன்னும் சில உடற்பயிற்சிகளை செய்ய முடியும்.
தினமும் 20 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி செய்யும் போது அது நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.
போதுமான தண்ணீர் குடிப்பது
நீர் என்பது உடலின் உயிரின் அடிப்படை ஆதாரம் என்று சாய் பல்லவி கருதுகிறார்.
மேலும் தண்ணீர் போதுமான அளவு குடித்து உடலை பாதுகாக்கிறார்.
சருமத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சுருக்கங்கள் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும், சருமம் மென்மையாக, பொலிவுடன் ,பளிச்சென்று இருக்கும்.
தண்ணீரின் தேவை நீங்கள் இருக்கும் இடத்தை சூழ்நிலையை பொறுத்து மாறுபடும், இருந்தாலும் நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பது சரியாக இருக்கும்.
செயற்கையான ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது.
சாய் பல்லவி சோப்பு ஷாம்பு போன்ற ரசாயன பொருட்களை தவிர்த்து இயற்கையான விஷயங்களை மட்டுமே தலைமுடி மற்றும் சரும பராமரிப்பில் பயன்படுத்துவதாக கூறுகிறார் அவர் பயன்படுத்தும் பொருட்கள் கற்றாழை(aloe vera), அரிசி தாள்பொடி, நாட்டுத் தேன் இவ்வாறு பயன்படுத்துவதால் நீண்ட கால அளவில் நம் அழகு பாதுகாக்கப்படும் உடலுக்குள் எந்த நச்சுப் பொருட்களும் சேராது சருமத்தில் ஏற்படும் எரிச்சலும் குறையும்.
எனவே இயற்கையான பொருட்களை நாம் பயன்படுத்தும் போது, நீண்ட கால அளவில் முகம் மற்றும் தலைமுடி பாதுகாக்கப்படும்.
மேக்கப் பயன்படுத்தப்படும் போது
அதிக மேக்கப் பயன்படுத்தப்படும்போது, சரும அடைப்பு ஏற்படுகிறது பிம்பிள்ஸ் மற்றும் சருமத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும்.
சருமம் அதன் இயல்பில் குறைந்து சோர்ந்து காணப்படும்.
இயற்கையான அழகு உண்மையான அழகு.
உட்புற அழகு – இன்னர் பியூட்டி
தியானம், நன்றி உணர்வு போன்ற செயல்கள் நம் உட்பொருள் அழகை மேலும் மேம்படுத்தும்,
அழகும் தன்னம்பிக்கையும் கொண்ட நபர் உட்புறமாக இருந்து ,பிரகாசிக்கிறார்கள்.
அழகு என்பது முகம் மட்டுமல்ல. உங்கள் எண்ணம், சொல், செயல் எல்லாவற்றில் இருந்தும் வெளிப்படும்.
இயற்கையாக தலை முடியை பாதுகாத்தல்
தலைமுடியை மூன்று நாட்களுக்கு ஒரு முறை கழுவ வேண்டும்
மென்மையான ஷாம்பு அல்லது அரிசி தண்ணீரை பயன்படுத்த வேண்டும்
சாய் பல்லவி ALOE VERA போன்ற இயற்கையான பொருட்களை மட்டுமே தன் தலை முடிக்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்
ALOE VERA பயன்படுத்துவதால் தலைமுடி மென்மையாகிறது. தலை முடி உதிர்வும் குறைவதால், தலைமுடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது.
வாரத்தில் இரண்டு முறை அல்லது ஒருமுறையாவது கற்றாழை (ALOE VERA) பயன்படுத்துவது உங்கள் தலைமுடிக்கு மிகவும் நல்லது.
முடிவுரை
செயற்கையான பொருளைத் தவிர்த்து, இயற்கையான பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் (தியானம், யோகா) நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழும்போது உள்ளுக்குள்ளும் வெளியிலும் நீங்கள் பிரகாசிக்க முடியும்.
source : 7 beauty secrets of saipallavi
Additional informations
கிளியோபாட்ரா ரோஜா நீர் பயன்படுத்தி, தன் முகத்தை ஈரப்பதமாகவும், இளமையாகவும் வைத்திருந்தார்.
ALOE VERA கிளியோபாட்ராவல் பயன்படுத்தப்பட்டது தலைமுடிக்கு ALOE VERA ஜெல்லை பயன்படுத்தி, முடியை மென்மையாக வைத்திருந்தார்.
ஆலிவ் எண்ணெய் ,பாதாம் எண்ணெய் போன்ற இயற்கையான எண்ணெய்களை பயன்படுத்தி, சருமத்தை மென்மையாகவும் இளமையாகவும் வைத்திருந்தார்.
வெள்ளை களிமண் முகமுடி அணிந்து அதன் மூலம் முகப்பருவை குறைத்து எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்தி சருமத்தை தூய்மைப்படுத்தினார்.
கிளியோபாட்ரா தன் அழகை பராமரிக்க கழுதை பாலை பயன்படுத்தினார் அதாவது அவர் அந்த கழுதை பாலுடன் தேன் பாதாம் எண்ணெய் மற்றும் dead sea salt உடன் கலந்து குளித்தார். இதனால் சர்ம புதுப்பிக்கப்பட்டது. கழுதை பாலில் குளிப்பதற்காக மட்டுமே, அவர் 200 கழுதைகளை தனியாக வளர்த்தார்.
தன் அழகு இருக்காவும் அதனை அதன் பராமரிப்புக்காகவும் உலகப் புகழ்பெற்றவர்.
EGYPT சாம்ராஜ்யத்தின் கடைசி மகாராணி கிளியோபாட்ரா .
source : கிளியோபாட்ரா