ஆரோக்கியம்

இந்த 1 Sleep Mistake இருந்தால் எந்த Hair Growth Tip-உம் வேலை செய்யாது

Sleep mistake hair growth-ஐ எப்படி முழுக்க நிறுத்துகிறது? எண்ணெய், ஷாம்பு மாற்றியும் ஏன் முடி வளரவில்லை என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

Sleep mistake – ஒரு நாள் இரவு தாமதமாக தூங்குவது என்பது பிரச்சனை இல்லை.
ஆனால் அது தொடர்ந்து இவ்வாறு இரவு தாமதமாக தூங்குவது  habit ஆக மாறும்போது, அதன் பாதிப்பு முதலில் தெரியும் இடம் –  நம்முடைய தலைமுடி.

பெரும்பாலும் பலர் Hair oil – ஐ மாற்றுவார்கள் அல்லது Shampoo brand – ஐ மாற்றுவார்கள்
சிலர் Costly treatment , Hair Transplant  என போய்விடுவார்கள்.


ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் பெரும்பாலும் யாரும் கவனிக்க மாட்டார்கள்

நம்முடைய தூக்கம் சரியா இருக்கா?

முடி உதிர்வு என்பது திடீரென்று வராது.
அது நம்முடைய உடல் நமக்கு தரும் ஒரு SILENT WARNING SIGNAL

அந்த Signal-ஐ ஆரம்பத்திலேயே நாம் புரிந்து கொண்டால், பெரிய Hair damage வருவதற்கு முன்பே கட்டுப்படுத்த முடியும்

Sleep & Hair Growth – உண்மையான தொடர்பு

நீங்கள் தூங்கும் நேரத்தில்தான் உங்கள் உடல் முழுவதும் Repair mode-க்கு போகும். அப்படி Repair mode-க்கு போகும்போது பகலில் நடந்த Damage-களை இரவில் உங்களது தூக்கத்தில்  சரி செய்யும்

நீங்கள் தூங்கும்போது உங்களுடைய,,

வளர்சிக்கான Growth hormone சுரக்கும்

Damage ஆன Cells Repair ஆகும்,

உங்களுடைய Scalp-ன் Blood circulation மிகச்சரியாக Balance ஆகும்,

உங்களுடைய முடியின் வேர்கள் (Hair follicle), அடுத்த Growth cycle- க்கு தயாராகும்.

இந்த அத்தனை செயல்களும் பகலில் (Daytime) நடக்காது.

இது முழுக்க முழுக்க தூக்கத்தை என்கிற biological process.

ஒன்றே ஒன்றுதான்

உங்களுடைய தூக்கம் குறைந்தாலோ அல்லது நீங்கள் தூங்கும் நேரம் தொடர்ந்து தவறினாலோ, இந்த Repair system முழு அளவில் அதனுடைய வேலையை செய்யாது.
அதனுடைய ஒட்டு மொத்த விளைவுதான் சிறிது சிறிதாக அதிகமாகும் hair fall.

Hair Growth-ஐ நிறுத்தும் அந்த 1 Sleep Mistake

12 மணிக்குப் பிறகு தூங்குவது (Late-night sleep)

பொதுவாக பலரும்  நினைப்பது என்னவென்றால்
“நான் 6 மணி நேரம் தூங்குறேன், மனிதனுக்கு 6 மணி நேரம் தூக்கம் என்பது போதுமானது

Timing எல்லாம் முக்கியமா?”

உங்களுடைய Hair growth-க்கு  தூங்கும் நேரம் (Sleep duration) மட்டும் முக்கியம் இல்லை.

எத்தனை மணிக்கு(Sleep timing)  தூங்க போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம்.

Late-night sleep ஒரு சாதாரணம் என்று நினைக்கலாம் ,  அதனால் Hormonal misalignment ஆகும்

ஏன் 12 மணி – 2 (12 PM TO 2 AM ) மணி நேரம் முக்கியம்?

இந்த நேரம் தான் நம்முடைய உடலுக்குப் மிகவும் முக்கியமான நேரம் அதாவது Damage களை சரி செய்யும் நேரம் Repair window.

இந்த நேரத்தில்தான்,

 நம்முடைய உடலில் Melatonin hormone அதிக அளவில் சுரக்கும்,

முடியின் வேர்களில் வளர்ச்சி ஆரம்பிக்கும்,

புதிய அழற்சி அதாவது Body inflammation இயல்பாக குறையும்,

Stress hormone (cortisol) இயற்கையாக (naturally) குறைய ஆரம்பிக்கும்.

இந்த நேரத்தில் நீங்கள்  Mobile screen பார்த்து கொண்டோ அல்லது bright light வெளிச்சத்தில்  இருந்தால், அது உங்களுடைய உடலுக்கு இது இரவா இல்லை பகலா என்ற குழப்பத்தைத் தரும்

அப்போது  உங்கள் உடல் குழப்பமடைந்து இது பகல் என hair growth-க்கு தேவையான repair process-ஐ இரவில்தான் செய்ய வேண்டும் என்று பின்னுக்கு தள்ளிவிடும்.

Sleep mistake
Sleep mistake

Sleep குறைந்தால் உடலில் என்ன நடக்கும்?

Melatonin hormone குறைவு

Melatonin Hormone என்பது தூக்கத்திற்கான hormone மட்டும் அல்ல.
அது ஒரு Hair Growth protector Hormone.

நாம் நன்றாக தூங்கினால் Melatonin சர்ரியான அளவில் சுரக்கும் , இந்த hormone முடிவளரும் போது அதற்கு உதவுகிறது , அதே சமயம் முடி விழாமலும் தடுக்கிறது.

Melatonin குறைந்தால்

  • Hair growth phase குறையும் – முடிவளரும் நேரம் குறையும்

  • Hair fall phase அதிகமாகும் – முடி உதிர்தல் அதிகரிக்கும்

  • புதிய தலைமுடி முளைப்பது என்ற செயல்முறை மெதுவாகும்

இதனால்தான் பலருக்கு
“முடி உதிர்வு குறைஞ்சுருக்கு, ஆனா புதுசா முடி வளரல”
என தோன்றுகிறது


2) Cortisol hormone – அதிகரிப்பு

Late-night sleep →  இரவில் அதிக நேரம் தூங்காமல் இருப்பதால் stress hormone அதிகமாக சுரக்கும்.

stress Hormone -Cortisol அதிகமாகும்போது

  • Scalp-ல் Sensitivity அதிகமாகும்

  • DHT sensitivity அதிகரித்து DHT ஹோர்மோன் முடின் வேர்களை நேரிடியாக பாதிக்கும்

  • முடியின் வேர்கள் (Hair roots) பலவீனமாகும்

  • மெல்லிய முடி இன்னும் மெல்லியதாகிவிடும்

இந்த சின்ன மாற்றங்கள் ஒரே நாளில் பெரிதாக தெரியாது.
2  முதல் 3 வாரங்களில் மெதுவாக தெரிய ஆரம்பிக்கும்.


3) Blood circulation imbalance – இரத்த ஓட்ட சமநிலை குறைவு

தொடர்ச்சியான தூக்க குறைவு (sleep deprivation) இருந்தால்:

Scalp-க்கு செல்லும் oxygen அளவு குறையும், முடி வேர்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது

Nutrients delivery மெதுவாகும் – உணவில் இருந்து கிடக்கும் சத்துகள் தாமதமாகும்

Hair follicle energy குறைவாகும் – முடி வேர்களுக்கான வளர்வதற்கு தேவையான சக்தி குறையும்

Result:
எண்ணெய், Mask, Serum, Treatment –  என நீங்கள் என்ன செய்தலும் உங்கள் முடியின்
Root level-ல் சரியான Response செய்யாது.

Hair Fall ஆரம்பிக்கும் முன் வரும் Sleep Signals

இந்த அறிகுறிகள் இருந்தால்,
முடி உதிர்வு இன்னும் கடுமையாக ஆரம்பிக்கவில்லை.
ஆனால் வரப்போகிறது.

  • Scalp itching

  • தலையனையில்(Pillow) அதிக முடி

  • உங்களுடைய Focus, memory குறைதல்

  • Head heavy , dullness உணர்தல்

இவை சாதாரணமான coincidence அல்ல.

“நான் நல்லாதான் சாப்பிடுகிறேன், அப்பறம் ஏன் hair fall?”

இது மிகவும் பொதுவான கேள்வி.

Food quality மட்டும் போதாது.

Food timing + sleep timing  இரண்டும் முக்கியம்.

Iron, protein, vitamins, minerals
இவை எல்லாம் நம்முடைய scalp-க்கு சரியாக செல்ல வேண்டுமென்றால்,

Sleep cycle மிக சரியாக align ஆக வேண்டும்,

உங்களுடைய தூக்கம் குறைந்தால்:

  • Absorption குறையும் – உணவில் இருக்கும் முக்கிய சத்துகள்  சரியாக உரியப்படாது

  • Utilization சரியாக நடக்காது –  scalp போக வேண்டிய சத்துகள் தலைக்கு அனுப்பாமல் வேறு பகுதிகளுக்கு அனுப்பிவிடும்

  • Nutrient storage imbalance ஆகும் – முடி வளர வேண்டிய சத்துகள் சரியான நேரத்தில் கிடைக்காது.

அதனால்தான்
“எல்லோரும் நிறைய try பண்ணிட்டேன், ஆனால் result இல்லை”
என்று பலர் நினைக்கிறார்கள்.

Hair Regrowth ஆரம்பிக்கும்போது முதலில் நமக்கு தெரியும் அறிகுறிகள்

Hair growth என்பது ஒரு நாள் மாயாஜாலம் இல்லை.
முதலில் progress signals தான் தெரியும்.

தூக்கம் சரியாக ஆரம்பித்ததும்

  • உங்கள் Scalp-இல்  itching குறைய ஆரம்பிக்கும்

  • Morning hair fall –  மெதுவாக குறையும்

  • Oil அல்லது Hair care products-க்கு நல்ல Response தெரிய வரும்

இவை தான் உங்களுடைய Hair Regrowth ஆரம்பித்ததற்கான ஆரம்ப தெரியும் அறிகுறிகள்.

7-Days Sleep Reset – நம்முடைய Hair Growth-க்கு உதவும் பழக்கம்

முதல் Day 1–3

  • இரவு 11 மணிக்குள் படுக்கைக்கு தூங்க போங்கள்

  • தூங்குவதற்கு 30 நிமிடம் முன்பாகவே mobile பார்ப்பதை நிறுத்தவும்

  • Heavy dinner தவிர்த்து அளவாக சாப்பிடவும்

  • Evening-க்கு பிறகு காபி குடிப்பதை தவிர்க்கவும்

இரண்டாவது Day 4–7

  • ஒரே மாதிரி  தூங்கி  எழுந்திரிக்கவும்  (sleep & wake timing) தொடரவும்

  • உங்களுடைய Room ஓரளவு dark ஆகவும் calm ஆக இருக்கட்டும்

  • Bright light களை avoid செய்யவும்

இந்த 7 நாட்களில்

  • புதிய hair product எதுவும்  முயற்சி வேண்டாம்

  • Oil massage எதுவும் செய்ய வேண்டாம்

Goal:  உங்கள் உடல் இயற்கையாக reset ஆகும்.

Common Myth vs Reality

 

Myth:
“தலையில் எண்ணெய் போட்டால் hair growth ஆகும்”

Reality:
உங்களுடைய தூக்கம் சரியில்லையென்றால், oil தலையின் ரோமவளிகளை-ஐ block செய்யும்.


Myth:
“Genetics தான் எல்லாம்” – அப்பாவுக்கு முடி உதிர்ந்தால் மகனுக்கும் தொடரும்

Reality:
Genetics வேகத்தை நிர்ணயிக்கும் ஆனால்
உங்களுடைய தூக்கம்தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும்.

ஒரே குடும்பத்தில்  ஒருவருக்கு நல்ல முடிவளர்ச்சியும் , ஒருவருக்கு hair fall இருக்கவும் காரணம் இதுதான்.


Long-Term Hair Protection Habits

  • தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுதல்

  • Late-night -இல் சர்க்கரை மற்றும் இனிப்புகளை தவிர்க்கவும்

  • Night நேரத்தில் Mobile scrolling பண்ணுவதை நிறுத்தவும்

  • Weekend-லும் அதாவது எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருக்கவும்

  • Stress management பழக்கமாக்கி கொள்ளுங்கள் , Meditation செய்யுங்கள்

Hair growth consistency-க்கு
routine தான் ரொம்ப முக்கியம்.


ஏன் இந்த ஒரு பழக்கம் எல்லாவற்றையும் control செய்கிறது?

ஏனெனில்

  • Shampoo scalp-ஐ  நன்றாக சுத்தம் செய்கிறது

  • Food உங்களுடைய முடி கட்டுமானத்திற்கு உதவுகிறது

ஆனால்

எல்லாவற்றிகும் உங்கள் Sleep தான் command center.

Command center சரியாக வேலை செய்யவில்லை என்றால்,
மற்ற எல்லா முயற்சிகளும் முழுமையான பலன்களை தராது.


Final Truth

நீங்கள் உங்களுடைய தலை முடியை வளர்க்க முயற்சி செய்யவில்லை.
ஆனால் நீங்கள் உடலுக்கு சரியான நேரத்தை தூங்குவதற்கு கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்

முடி scalp-ல் வளரவில்லை.
அது உங்களுடைய தூக்கத்தில்தான் வளர்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button