லைஃப்ஸ்டைல்

சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக செயலிழப்பு அமைதியான மனிதனை செயலிழக்க வைக்கும் அபாயம்

அறிமுகம்

நம் உடலைப் பொறுத்தவரை பாகுபலி படத்தில் வரும் கட்டப்பா, நம்முடைய சிறுநீரகம் தான், அவ்வளவாக பேசாதவர்,  எப்போதும் Style – action தான், அவ்வளவாக பேசாதவர் என்றாலும், நாம் அவரை நன்றாக கவனித்துக் கொண்டால், அவருடைய செயல்பாடு நம் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக தொடரும்.

நம்மில் பலரும் அவரை கவனிக்க தவறுவதால், சிறிய பிரச்சினைகள் பெரிதாகி சிறுநீரகங்கள் மெல்ல மெல்ல செயலிழக்க ஆரம்பிக்கும்.

சாதாரண மக்கள் வாழ்க்கை

பணக்காரன், ஏழை என்று இல்லாமல் அனைவரையும் பாதிக்க கூடியது Kidney Failure. சல்மான்கான் கூட தப்பிக்க முடியாது.

சாதாரண மக்கள் உயர் ரத்த அழுத்தத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை, தெரிந்தாலும் மருந்துகள் முறையாக எடுத்துக் கொள்வதில்லை.

இப்படியெல்லாம்  இருக்கும்போது, திடீரென்று அவர்கள் வாழ்க்கையில் ஒருநாள் கை கால்களில் முகம் வீக்கம் வரும், அதுவும் சாதாரணமானது என்று எடுத்துக் கொள்வோம், கூடவே தலைசுற்றல் , வாந்தியும் வரும்.

இறுதியாக மருத்துவரை அணுகும் போது அவர் சொல்வார், உங்களுக்கு chronic kidney disease. அதாவது மெல்ல, மெல்ல சிறுநீரகம் செயல் இழக்கும் நோய் வந்துவிட்டது, இதுதான் முதல் படி தான் இந்த அறிகுறி சொல்வது உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் நச்சுக்கள் வெளியேறாமல் ரத்தத்தில் கலந்துள்ளது.
சல்மான் கான் , அமிதா பச்சன், ரஜினிகாந்த் அனைவரும் சிறுநீரக பிரச்சனையால், பாதிக்கப்பட்டவர்கள். அடிப்படை காரணம் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது தான்.

சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக செயலிழப்பு
சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரகம் என்ன வேலை செய்கிறது?

நீங்கள் அமைதியாக இருந்தாலும் சரி, விளையாடினாலும் சரி, தூங்கினாலும் சரி ,என்ன செய்து கொண்டிருந்தாலும் அது உங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

உடலின் திரவ அளவை சமநிலையாக்குகிறது.
முன்பே கூறியது போல் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வடிகட்டி வெளியேற்றுகின்றது.

(Red blood cells ) ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகிறது.

சிறுநீரகம் அதிகமாக பாதிக்க பொதுவான காரணம்
குறைவான நீரை எடுத்துக்கொண்டு, அதிக உப்பு மற்றும் pain killer மருந்துகளை எடுக்கும் போது சிறுநீரகம் overload ஆகி திணற ஆரம்பிக்கும்.

சிறுநீரகம் செயலிழக்க வைக்கும் முக்கிய காரணங்கள்

உயர் ரத்த அழுத்தம் (High BP)

இந்தியாவில் நடக்கும் kidney failure களில் முதலிடம் பிடிப்பது ரத்த அழுத்தம்(Blood Pressure).

அமைதி என்ற ஒன்று இருப்பதே எல்லோருக்கும் தெரியாத அளவில் stress அதிகமாக பரவி விட்டது.

சர்க்கரை நோய் (Diabetes)

இது இரண்டாவது காரணம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் நாள்பட அளவில் ,உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும்.

Fast Food & Junk Foods(மூன்றாவது காரணம்)

Fast Food உணவுகளில் சுவைக்காக கலக்கப்படும் அதிகப்படியான உப்புக்கள் மற்றும் நாமும் நம் குழந்தைகள் அடிக்கடி சாப்பிடும் junk foods.

தண்ணீர் குறைவாக குடித்தல்

தண்ணீர் போதுமான அளவு குடித்தாலாவது ஓரளவு நாம் கொடுக்கும் பிரச்சனைகளை சிறுநீரகம் சரி செய்யும்.

தண்ணீரும் போதுமான அளவு என்பதை விட, குடிப்பதே இல்லை என்பது தான் இங்கே பிரச்சனை.

மருந்துகள் (Painkillers)

வலியை குறைக்கும் pain killers சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும்,

ஸ்டெராய்டுகள்

சில சமயங்கள் உடற்பயிற்சி செய்பவர்கள் உடலை மேலும் பெரிதாக காட்ட steroids பயன்படுத்துவதாலும் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

மதுபானம் & புகைப்பிடித்தல்

மதுபானம் ,புகைப்பிடித்தல் இரண்டுமே அடிப்படையில் ஆபத்தானது.

மரபு வழி காரணங்கள்


மரபு வழிகளிலும் வாய்ப்புகள் உண்டு.

அப்பா, அம்மா பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் உடலை வருடம் ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரக செயலிழப்பு
சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரகத்திற்கு உதவும் இயற்கை வழிகள்

தினமும் 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் உடலின் தேவைக்கேற்ப அருந்த வேண்டும்.
உப்பின் அளவை 1 டீ ஸ்பூன் அளவுக்கு குறைப்பது.
பச்சை காய்கறிகள், பழங்கள், மற்றும் கீரைகள் என இயற்கையான உணவுகளை உண்ண வேண்டும்.
பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இயற்கை வழிகள்

நெல்லிக்காய்

Anti oxidants  நிறைய உள்ள நெல்லிக்காய் kidney toxins ஐ குறைக்கும்.

தூதுவேளை தண்ணீர்

தூதுவேளை தண்ணீரும் சிறுநீரகத்துக்கு உதவி செய்யும்.

வெந்தயம் + எலுமிச்சை தண்ணீர்

வெந்தயம்+ எலுமிச்சை தண்ணீர் நல்லது.

சுரைக்காய், வெள்ளரிக்காய்

சுரைக்காய், வெள்ளரிக்காய், ஐஸ் ,சிறுநீரக வெப்பத்தை குறைக்கும்.

மதுபானம் ,புகைப்பிடித்தல் இரண்டுமே அடிப்படையில் ஆபத்தானது.
மரபு வழிகளிலும் வாய்ப்புகள் உண்டு. அப்பா, அம்மா பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் உடலை வருடம் ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மன அமைதி & உடற்பயிற்சி

உடற்பயிற்சி உடலின் திரவ சமநிலையை கொண்டு வரும் தினசரி யோகா, சூரிய நமஸ்காரம் ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.
மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் உயரும், அதுவே சிறுநீரகத்தை தாக்கும்.

மருத்துவர் அறிவுரை

சிறுநீரகம் வலிக்காது, என்பதால் அது ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம் இல்லை வருடம் ஒருமுறை kidney function test செய்வது நல்லது.

முடிவுரை

சிறுநீரகம் நமக்கான உடலில் உள்ளே போராடும் வீரன், நாள் முழுவதும் நமக்காக உழைக்கும் அவருக்கு ஊட்டமளிக்க
தண்ணீர் குடி, உப்பை குறை
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி வருடம் ஒரு முறையாவது kidney சோதனை செய், சிறுநீரகம் ஒரு உயிருள்ள வடிகட்டி.

Source 1

National Kidney Foundation (NKF)

Source 2

National Institutes of Health (NIH) – Kidney Information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button