Oil pulling செய்வதன் மூலம் உங்கள் பல்லானது மேலும் வெண்மையாகும், வாயில் உள்ள கிருமிகள் குறைக்கப்படும், உங்கள் பற்களில் கறை படியாமல் காக்கப்படும்.
இது ஒரு பழங்கால ஆயுர்வேத முறை, இதன்படி நாம் பல் துலக்கும் முன்பே oil pulling செய்ய வேண்டும்.
Oil pulling செய்ய எல்லோரும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறார்கள், ஆனால் இந்த எண்ணையைத் தவிர உள்ள உயர்தர சமையல் எண்ணெய்களையும் பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்தினாலும், அனைத்து எண்ணெய்களிலும், தனித்து நிற்பது தேங்காய் எண்ணெய் மட்டுமே.
ஆயில் புல்லிங் செய்வது எப்படி? How to Oil pulling effectively?
ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெயை வாயில் ஊற்றிக் கொள்ளவும்,
எண்ணையை விழுங்காமல் வாயின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்லவும், அதாவது கொப்பளிக்கவும்.
ஆரம்பத்தில் Oil pulling குறைந்தது ஐந்து நிமிடம் என்று ஆரம்பிக்கவும், நாட்கள் செல்ல செல்ல நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம் 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை கூட Oil Pulling செய்யலாம்.
ஆயுர்வேத முறைகளின் படி 20 நிமிடங்கள் வரை ஆயில் புல்லிங் செய்யும் போது, வாய்ப்பகுதியில் உள்ள தேவையற்ற நச்சு பாக்டீரியாக்களை அழித்து வாய்ப்பகுதியை முழுமையாக சுத்தம் செய்யும்.
வாயின் எல்லா பகுதிகளுக்கும் அந்த எண்ணெயை கொண்டு செல்லவும், கொஞ்சம் கடினமாக தோன்றினாலும் தொடர்ந்து செய்யவும்.
சிலருக்கு வாய் முழுவதும் நிரம்பிய உணர்வு தோன்றலாம் அப்படி தோன்றினால், சிறிது அளவு எண்ணெயை துப்பி விட்டு தொடர்ந்து செய்யவும்.
உங்களுக்கு போதும் என்ற உணர்வு தோன்றிய உடன், துப்பி விடவும், இப்போது அந்த எண்ணெய் முழுவதும் வெளிர்த்து போய் இருக்கும்.
இப்போது எப்போதும் போல உங்கள் Brush வைத்து பல் துலக்கவும்
தொடர்ந்து செய்யும்போது உங்களுடைய Oil Pulling நேரம் அதிகரிக்கும்.
ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
4 Amazing Effects of Oil Pulling
வாய்ப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை குறைக்கும்
நம்முடைய வாய்ப்பகுதியில் 700 பாக்டீரியாக்கள் இருக்க இருக்க வாய்ப்பு இருக்கிறது.
எந்த ஒரு நேரத்திலும் நாம் சோதனை செய்யும் போது, வாய் பகுதியில் குறைந்தது 350 பாக்டீரியாக்கள் இருக்கும்.
இதில் உள்ள சில குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் தான் வாய் துர்நாற்றம் , பல் சொத்தை, ஈறுகளில் பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
பல ஆய்வுகள் மூலம் ஆயில் புல்லிங் வாய்ப்புகள் உள்ள பாக்டீரியாக்களை பெருமளவு குறைப்பதில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
60 நபர்களை தேங்காய் எண்ணெய் கொண்டு Oil pulling செய்ய வைத்து ஆராய்ச்சி செய்ததன் மூலம், இரண்டு வாரங்களில் அவர்கள் வாய் பகுதியில் பாக்டீரியாக்கள் கணிசமாக குறைந்ததை கண்டறிந்திருக்கிறார்கள்.
வாய் துர்நாற்றத்தை குறைக்கிறது
மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் இந்த பிரச்சனையை சந்திக்கிறார்கள்.
2011 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆயில் புல்லிங் செய்வது வாய் துர்நாற்றத்தை குறைப்பதில் பயனளிப்பதாக உள்ளது தெரிய வந்துள்ளது.
20 குழந்தைகள் எல்லாமே கொண்டும் ஆன்ட்டி செப்டிக் வாய்கழுவு மருந்துகள்(Anti septic Mouth wash) மூலமும் எள் எண்ணெய் மூலமும் வாய் கொப்பளித்தனர்.
இவ்வாறு இரு முறை ஒப்பளித்த போதும் வாயில் துர்நாற்றத்திற்கு காரணமான நுண்ணுயிரிகள் பெருமளவில் குறைந்தன.
பாக்டீரியாக்கள் நாக்கில் படியும் படலத்தில் சிக்கிக் கொண்டு இருப்பதன் மூலமும், மோசமான வாய் சுகாதாரத்தின் காரணமாகவும் மற்றும் ஈறு சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பதன் காரணமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.
Oil pulling பொருத்தவரை அது ஒரு இயற்கையான மருந்தாக செயல்பட்டு வாயில் துர்நாற்றத்தை குறைக்கிறது.
பல் சிதைவு ஆயில் புல்லிங் மூலம் தடுக்கப்படுகிறது
என்னதான் நாம் வாயை சுத்தமாக வைத்திருந்தாலும் பற்களில் உள்ள சிறு சிறு உணவு துகள்கள், பல் சிதைவை ஏற்படுத்த காரணமாக உள்ளது.
பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் சிதைக்கும் போது அமிலம் உருவாகி அது பல் சீதைவிற்கு காரணமாக அமைகிறது, முக்கியமாக அது பற்களின் எனாமலை அளிக்கிறது.
அதிகமான சர்க்கரை சார்ந்த உணவுகளை உட்கொள்வது மேலும் வாய் சுகாதாரம் இல்லாமல் இருப்பது போன்றவை பல் சிதைவிற்கு காரணமாக அமைகிறது.
ஆயில் புள்ளி வாய் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை குறைப்பது மூலம் பல் சிதைவு ஒரு வழியாக தடுக்க முடிவதாக பல ஆய்வுகள் காட்டுகிறது.
ஆயில் புல்லிங் மூலம் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கலாம்
60 நபர்கள் வைத்து செய்த ஆய்வின் மூலம் தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்ததன் காரணமாக உயிர்களின் ஆரோக்கியம் மேம்பட்டதாக தெரிகிறது.
அதேபோல இன்னொரு ஆய்வில் எள் எண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் சேர்த்து அதன் மூலம் ஈறுகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறைந்தது.
ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் ஆயில் புல்லிங் செய்வதை தவிர்க்கவும், அவர்கள் எண்ணெய்யை விழுங்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல எண்ணெய் பொருட்களினால் அலர்ஜி இருப்பவர்களும் ஆயுள் புழுங்கி தவிர்க்கலாம்.
முடிவுரை
OIL PULLING மட்டுமல்ல காலை மற்றும் இரவு இரண்டு நேரங்களில் பல் துலக்க வேண்டும். அப்படி துலக்கும் போது உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும். இரவு உணவு உண்ட பிறகு, ,என்னதான் நீங்கள் வாயை சுத்தமாக வைத்திருந்தாலும் சில உணவுத் துடுக்குகள் பற்களில் சிக்கிக் கொண்டிருக்கும். அடுத்த எட்டு மணி நேரம் நீங்கள் தூங்குவதால் அது பாக்டீரியாக்களுக்கு பல் சிதைவை ஏற்படுத்த போதுமானது. எனவே இரவு பல் துலக்குவதை கண்டிப்பாக பின்பற்றவும்.